தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம்: டெல்லியில் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது + "||" + 31st GST Council meeting to be held on December 22

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம்: டெல்லியில் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம்:  டெல்லியில் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது
புதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி,

உலகிலேயே முதல் முறையாகப் பிரான்ஸ் நாடு வரி ஏய்ப்பை முழுமையாகத் தடுக்க ஜிஎஸ்டி வரியை முதல் முறையாக அறிமுகம் செய்தது. 

இதன் பின் உலகில் சுமார் 140 நாடுகள் அமலாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகப் பிரேசிஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளில் 2 ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. 

இந்தியாவில் ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.  இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 
அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளாக நிதி அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்.  

இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சில சில வரிக்குறைப்பு முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

தற்போது, 35 பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இவற்றில் பல பொருட்களை குறைவான வரி எல்லைக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. 

சில பொருட்கள் 18% வரியிலிருந்து 5% வரிக்கு மாற்றப்படலாம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.