உலக செய்திகள்

பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் + "||" + BJP has anti Muslim anti Pakistan approach Pak PM Imran Khan

பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்,

பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இம்ரான் கான், இந்தியாவில் ஆளும் கட்சியான பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள இம்ரான் கான், “இவ்வழக்கின் நிலையை ஆய்வு செய்ய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன். பயங்கரவாதம் தொடர்பானது, இவ்வழக்கை தீர்ப்பதில் நாங்கள் நாட்டம் கொண்டுள்ளோம்,” என குறிப்பிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
2. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்தபோதும் பா.ஜனதாவுக்கு காங்கிரசை விட அதிக ஓட்டு
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்த போதிலும் பா.ஜனதா அதிக சதவீத ஓட்டுகளை பெற்று இருப்பது தெரிய வந்து உள்ளது.
3. பா.ஜனதாவிற்கு மக்கள் முத்தலாக் கொடுத்துள்ளனர் - சசிதரூர் கிண்டல்
பா.ஜனதாவிற்கு மக்கள் முத்தலாக் கொடுத்துள்ளனர் என சசிதரூர் கிண்டல் அடித்துள்ளார்.
4. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்
இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
5. பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்
மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ள சிவசேனா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.