மாநில செய்திகள்

பராமரிப்பு பணி : சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து + "||" + Electric trains canceled tomorrow

பராமரிப்பு பணி : சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி : சென்னை கடற்கரை- தாம்பரம்  இடையே  நாளை மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை (8-ம் தேதி) இரவு 11.30 முதல் மறுநாள் (9-ம்தேதி) காலை 5.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தென்னக ரயில்வே அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு நாளை( 8-ம்தேதி) இரவு 11.30 முதல் மறுநாள் (9-ம்தேதி) காலை 5.30 வரை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.   

இந்த குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும், செங்கல்பட்டிலிருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.