தேசிய செய்திகள்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த 10–ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் + "||" + All party meet on Dec. 10 ahead of winter session of Parliament

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த 10–ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த 10–ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக 10–ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


புதுடெல்லி, 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 11–ந் தேதி தொடங்கி ஜனவரி 8–ந் தேதி வரை நடக்கிறது. வழக்கமாக நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த ஆண்டு தாமதமாக தொடங்குவதற்கு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாகும். 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் முழுமையான கூட்டத் தொடர் இது என்பதால் இரு அவைகளையும் சுமுகமாக, ஒருமித்த கருத்துடன் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக 10–ந் தேதி டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து உள்ளது.

இதில் சபை அமளி இன்றி சுமுகமாக நடைபெறவும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கும்.

முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேறாத காரணத்தினால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது. இப்போதைய கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிலுவையில் கிடக்கும் உடனடி முத்தலாக் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும். 

இதேபோல் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதா, கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றையும் இந்த தொடரில் நிறைவேற்ற பா.ஜனதா அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியன்று
குளிர்கால தொடருக்காக பாராளுமன்றம் கூடுகிறது. எனவே ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அனல் பறக்க மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் என பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது அன்வர்ராஜா எம்.பி. பேச்சு
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அன்வர்ராஜா எம்.பி. கூறினார்
2. மேற்கு வங்காள விவகாரத்தால் பாராளுமன்றத்தில் 2-வது நாளாக கடும் அமளி
மேற்கு வங்காள விவகாரத்தால் பாராளுமன்றத்தில் 2-வது நாளாக கடும் அமளி ஏற்பட்டது.
3. பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் அன்வர்ராஜா எம்.பி. வழங்கினார்
பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டரை அன்வர்ராஜா எம்.பி. வழங்கினார்.
4. மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம்
அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
5. ரபேல் ஒப்பந்த விவாதத்தின் போது ஜெட்லியை நோக்கி பறந்த பேப்பர் விமானங்கள்!
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின் போது ஜெட்லியை நோக்கி பேப்பர் விமானங்கள் பறந்தது.