தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு + "||" + Prime Minister Narendra Modi has met with the Governor of Pancharlal Purohit

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.
புதுடெல்லி,

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்து உள்ளது.


இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்வதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகத்தில் உள்ள காவிரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும்  என்று தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்கினார். மேலும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகளை டெல்லி சிறப்பு படை கைது செய்தது
புதுடெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகளை டெல்லி சிறப்பு படை போலீஸ் கைது செய்துள்ளது.
2. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வில் தகவல்
தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா, என அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
3. நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி
நாடாளுமன்றத்தில் நான் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார். என்னை சந்திக்க அவருக்கு நேரம் எதுவும் ஒதுக்கவில்லை என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
4. போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது
போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி செய்த 22 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
5. புதுடெல்லி: ஜெயின் துறவி தருண் சாகர் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
ஜெயின் துறவியான தருண் சாகரின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #PMModi #JainMonkTarunSagar