தேசிய செய்திகள்

அருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + Arun Jaitley against petition dismissed in Supreme Court

அருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

அருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிரான மனு மீதான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடில்லி,

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள ரூ.9.59 லட்சம் கோடியில் இருந்து மூன்றில் ஒரு பங்கை, மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பதால்தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடா்பாக அருண் ஜெட்லி தெரிவித்த கருத்துகளும், அதற்கு, ரிசர்வ் வங்கி துணை கவா்னா் ஆச்சாா்யா தெரிவித்த பதிலும் விவாதத்துக்கு உள்ளானது.


இந்நிலையில், இதனை மையமாக வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞா் எம்.எல்.சா்மா பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும் இதே மனுதாரா் அடுத்து ஏதாவது பொதுநல வழக்குத் தொடர்ந்தால் அதற்கு முன்பு ரூ.50,000 அபராதம் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால் அவா் இனி பொதுநல வழக்குத் தொடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தொடர்புடைய செய்திகள்

1. உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு பெட்டியில் போட்ட விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு போடும் பெட்டியில் விவசாயிகள் போட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது நல்லது தான் - முன்னாள் கேப்டன் டிராவிட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி சந்தித்த தோல்வி நல்லது தான் என்று இந்திய முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியுள்ளார்.
4. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5. கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுத்த பெண்கள்
குடிநீர் வசதி செய்து செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த பெண்கள் மனு கொடுத்தனர்.