தேசிய செய்திகள்

பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம் + "||" + Congress MP from Bihar Death by heart attack

பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்

பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்
பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
புதுடெல்லி,

பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மவுலானா அஸ்ரார்-உல்-ஹக். இவர் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிஷான்கஞ்சில் உள்ள சுற்றுலா இல்லத்தில் இரவில் தங்கினார்.


அங்கு நேற்று அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் அவரது சொந்த ஊரில் நடந்தது. மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி.க்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி. மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது
பீகாரில் காங்கிரஸ் - ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது.
2. பீகாரில் வேன் மீது லாரி மோதி 7 பேர் சாவு
பீகாரில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாயினர்.
3. பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு டெல்லிக்கு மாற்றம்
பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு டெல்லிக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4. பீகாரில் பயங்கர விபத்து: ரெயில் கவிழ்ந்து 6 பயணிகள் பலி
பீகாரில் ரெயில் கவிழ்ந்து 6 பயணிகள் பலியாகினர்.
5. பீகார் அரசு காப்பக பயங்கரம்: சிறுமிகளை ஆபாச நடனம் ஆடவைத்து, பலாத்காரம் - சிபிஐ குற்றப்பத்திரிகை
பீகார் அரசு காப்பகத்தில் சிறுமிகளுக்கு நடந்த பயங்கரமான சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.