தேசிய செய்திகள்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + The accusation of calling students a wrong way: Nirmala Devi case CBI Petition Reject for an investigation - Supreme Court orders

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்ற கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி,

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி வக்கீல் ஜெய் சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.


அந்த மனுவில், “உதவி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளியாகும். எனவே வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது,

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
2. நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3. கள்ளத்துப்பாக்கிகள் விற்பனையை தடுக்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு
தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையை தடுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
4. படிக்கட்டுகளில் பயணம் செய்தவர்களை கண்டிக்காத அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது வழக்கு
அரியலூர் முதல் கீழப்பழுவூர் வரை செல்லும் சாலையில் அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார்.
5. இரட்டை இலை சின்னம் வழக்கு: டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இரட்டை இலை சின்னம் வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.