தேசிய செய்திகள்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு + "||" + To block the megadathu dam across the river of the cauvery - Puducherry government sues Supreme Court

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான பூர்வாங்க ஆய்வு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசும், மேகதாது அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தது. புதுச்சேரி அரசு தரப்பில் மூத்த வக்கீல் வி.ஜி.பிரகாசம் தாக்கல் செய்த இந்த மனுவில், அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி அளித்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர மத்திய மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு ஏற்கனவே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுடன், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி மாவட்டத்தில் பாலைவனமாக மாறிவரும் அகண்ட காவிரி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
திருச்சி மாவட்டத்தில் பாலைவனமாக மாறிவரும் அகண்ட காவிரியால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
2. திருவையாறு காவிரி படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவையாறு காவிரி படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3. காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் - நிதின் கட்காரி
ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நிதின் கட்காரி கூறினார்.
4. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை; மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
5. காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.