உலக செய்திகள்

உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு + "||" + Road accident deaths swell million globally each year WHO

உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும்  சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

5 முதல் 29 வயது வரை கொண்ட இளம் வயதினர் உயிரிழப்புகளுக்கு சாலை விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 லட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 லட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் 11 மாதங்களில் சாலை விபத்துகளில் 377 பேர் சாவு உயிரிழப்பு குறைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 377 பேர் இறந்து உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் உயிரிழப்பு குறைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.
2. “எல்லையில் நேரிடும் உயிரிழப்பைவிட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படுவது அதிகம்” சுப்ரீம் கோர்ட்டு கவலை
குண்டும், குழியுமான சாலைகளால் நேரிட்ட விபத்தில் கடந்த 5 வருடங்களில் 14,926 பேர் உயிரிழந்துள்ளனர் என கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, இதனை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
3. நீலகிரி அருகே கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் பலி
நீலகிரி மசினகுடி அருகே கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் மரணம் அடைந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
4. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் நேரிட்ட பெரும் விபத்து!
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் பெரும் விபத்து நேரிட்டுள்ளது. #TrafficRuleViolations #Hyderabad
5. அதிக வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் சதவீதம் குறைவு
உலகளாவிய அளவில்,ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 40 சதவீதம் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.