கிரிக்கெட்

அடிலெய்டு டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு + "||" + Bumrah strikes before rain stops play

அடிலெய்டு டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

அடிலெய்டு டெஸ்ட்:  மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டு,

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாராவின் சதத்தால் (123 ரன்) சரிவில் இருந்து தப்பித்ததுடன், முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து,  தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி , இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அஷ்வின் சுழலில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார். இதனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலிய அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஏறக்குறைய அரைமணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டம் மீண்டும் நடைபெற்றது.  மிட்செல் ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 91.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 204 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.  இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.  டிராவிஸ் ஹெட் 66 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி இன்னும், இந்திய அணியை விட 46 ரன்கள் பின் தங்கியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2. அடிலெய்டு டெஸ்ட் : இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் அறிவிப்பு
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ளது. இந்திய அணி 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.