மாநில செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது + "||" + Petrol Price cut by 24 paise pet litre

பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைவு,  டீசல் விலையும் குறைந்தது
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.73.33 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. நேற்று சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.57 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,  இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து ரூ.73.33 ஆகவும், டீசல் விலை 26 காசுகள் குறைந்து 68.93 ஆகவும் விற்பனை செயப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
2. புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்
புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்
சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4. அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை - வெங்கையா நாயுடு
அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
5. குடிநீர் பற்றாக்குறை : தமிழகத்திற்க்கு உதவுவதாக ஜெகன் மோகன் ரெட்டி உறுதி
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவிடம் சென்னைக்கு உதவுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்தார்.