மாநில செய்திகள்

டிசம்பர் 14-ந்தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன் + "||" + Please be patient on the mid December system with nearly 7 days to go-TamilNadu Weatherman

டிசம்பர் 14-ந்தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்

டிசம்பர் 14-ந்தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்
டிசம்பர் 14-ந்தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டிருக்கும் பதிவில், 

தற்போதைய வானிலை மாற டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரை காத்திருந்துதான் ஆக வேண்டும். இன்னும் 7 நாட்கள் செல்ல வேண்டும். பர்மா, ஒடிசா, ஆந்திராவில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து அறிந்திருப்பீர்கள். இதில் ஒரே ஒரு கேள்விதான், தற்போது இருக்கிறது. அது என்னவென்றால் தமிழகத்துக்கு அது எப்படி வரப்போகிறது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகவா? மண்டலமாகவா? அல்லது புயலாகவா? என்பதே அது.

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு வரும் வகையில் வானிலை மாறும் வரை காத்திருப்பது தான் அவசியம். அதுவரை என்ன செய்வது என்று கேட்க வேண்டாம், ஊடகங்களில் மழை பற்றி வரும் சற்று உப்புக் காரம் சேர்க்கப்பட்ட செய்திகளைப் படித்துக் கொண்டிருங்கள்.

விரைவில் மழை பற்றிய தகவல்களோடு சந்திக்கிறேன். டிசம்பர் 14 / 15-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை