மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி + "||" + TN government state does not change in the matter of sterile plant closure; Minister SB Velumani

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவை,

கோவையில் ரூ.295 கோடி மதிப்பீட்டில் சேலம்-கொச்சின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன.  இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.  இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதால் விபத்துகள் குறையும்.  கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அவரிடம், தூத்துக்குடியில் அமைந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. "ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது" - வேதாந்தா நிறுவனம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் வழக்கு: வைகோவின் எதிர்மனு விசாரணைக்கு ஏற்பு - ஐகோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடுத்துள்ள வழக்கை எதிர்க்கும் வைகோவின் மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.
4. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்- தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இணக்கமான சூழ்நிலையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
5. அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு சம்மன் அனுப்ப தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களை விசாரிக்க சம்மன் அனுப்ப தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? எனவும் கேள்வி எழுப்பியது. தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-