கிரிக்கெட்

7 வயது காஷ்மீரி சிறுவனின் பந்து வீச்சை புகழ்ந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே + "||" + 7-year-old Kashmiri boy's bowling wins praise from Shane Warne

7 வயது காஷ்மீரி சிறுவனின் பந்து வீச்சை புகழ்ந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே

7 வயது காஷ்மீரி சிறுவனின் பந்து வீச்சை புகழ்ந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே
7 வயது காஷ்மீரி சிறுவனின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே புகழ்ந்துள்ளார்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுவன் அகமது (வயது 7).  இவன் உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடியபொழுது எடுக்கப்பட்ட வீடியோவை பத்திரிகையாளர் இஸ்லாஹ் முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து அவர், இந்த கூக்ளி ஒன்றரை மீட்டர் அளவுக்கு திரும்பி செல்கிறது.  இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு.  ஷேன் வார்னே இதனை கவனியுங்கள்.  உங்களுக்கு போட்டியாக ஆள் இருக்கிறார் என அதில் பதிவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள வார்னே, மிக சிறந்த பந்து வீச்சு என்று தனது ஆச்சரியத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.  இந்த இளம் வயதில் சிறந்த முறையில் பந்து வீசியுள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.  அகமது பந்து வீச்சு வீடியோவை 64 ஆயிரம் பேர் கண்டுகளித்து உள்ளனர்.