தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: பா.ஜனதாவுக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி -சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை + "||" + Madhya Pradesh: BJP wins over 200 seats for BJP - Shivraj Singh Chouhan believes

மத்திய பிரதேசம்: பா.ஜனதாவுக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி -சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேசம்: பா.ஜனதாவுக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி -சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை
மத்திய பிரதேசத்தில், பா.ஜனதா 200 தொகுதிகளுக்கு மேல் எளிதில் வெற்றிபெறும் என சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டாடியா,

மத்திய பிரசேதத்தில் பா.ஜனதா மிக சுலபமாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். தொடர்ந்து 4-வது முறையாக பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.


ஆனால், தொடர்ந்து 15 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சியில் அக்கட்சிக்கு எதிரான அலைகளே எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளும் பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறுமா அல்லது காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற கருத்துக்கணிப்புகள் இடையே வேறுபாடுகள் நிலவுகிற நிலையில், உறுதியாக எந்த நிறுவனமும் கணிப்பை தெளிவாக சொல்லவில்லை.

இந்நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான பின்னர் முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பில், “சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர். நீண்ட நாட்களாக பொதுமக்களுடன் தொடர்பில் உள்ளேன். அனைத்து தரப்பு மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. அதனால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்காது. எளிதில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுவிடுவோம்” என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது - யஷ்வந்த் சின்ஹா
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் எங்கும் இருக்காது எனவும் யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.
2. பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது -சிவசேனா விமர்சனம்
பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
3. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது; யார் முதல் அமைச்சர்?
மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர் ஆனந்திபென் படேல்
4. ராஜஸ்தானில் 13 மந்திரிகள் தோல்வி
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்தது. அங்குள்ள மொத்தம் 19 மந்திரிகளில் 13 பேர் தோல்வியை தழுவினர்.
5. மத்திய பிரதேசம்: ஆளுநருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் கடிதம்
மத்திய பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆளுநருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.