தேசிய செய்திகள்

முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து + "||" + Those in key positions criticizing the central government gives pleasure - P. Chidambaram commented on Twitter

முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து

முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து
முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “ முதலில், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ‘‘பணமதிப்பு நீக்கம், பெருமளவு அதிர்ச்சி அளித்த முடிவு’’ என்று தனது மவுனத்தை கலைத்து கூறினார்.


பிறகு, சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி.ராவத், பணமதிப்பு நீக்கம், தேர்தல்களில் கருப்பு பண புழக்கத்தை தடுக்கவில்லை என்று கூறினார்.

இப்போது, வடக்கு பிராந்திய ராணுவ தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற டி.எஸ்.ஹூடா, ராணுவ துல்லிய தாக்குதல் பெரிதுபடுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்படுவதாக கூறியுள்ளார்.

முக்கிய பதவிகளில் இருந்தவர்கள், தங்களது அச்சத்தை களைந்து மவுனத்தை கலைத்து அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.