தேசிய செய்திகள்

டி.வி. விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு + "||" + TV In the discussion program Melee

டி.வி. விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு

டி.வி. விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு
டெல்லியில் நடந்த டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் கைகலப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,

டெல்லி அருகே நொய்டாவில் (உத்தரபிரதேசம்) உள்ள ஒரு தனியார் டெலிவிஷன் நிறுவனத்தில் நடைபெற்ற நேரடி விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் படோரியா, பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா ஆகியோர் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது ஆவேசமாக பேசிய அவர்கள் இருவரும் திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து பின்னர் கவுரவ் பாட்டியா அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சமாஜ்வாடி செய்தித் தொடர்பாளர் அனுராக் படோரியாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விவாத நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காட்சிகளை வழங்குமாறு அந்த டி.வி. நிறுவனத்தை போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்தும், போலீஸ் நிலையத்தின் முன்பு ஏராளமான சமாஜ்வாடி கட்சியினர் திரண்டனர். அனுராக் படோரியாவை பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தாக்கியதாக சமாஜ்வாடி எம்.பி. சுரேந்திர சிங் நாகர் குற்றம்சாட்டினார்.