தேசிய செய்திகள்

கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா - ரூ.1,500 கோடியில் அமைக்கப்படுகிறது + "||" + In K.S.R. Dam area recreational park - Will set at Rs 1,500 crore

கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா - ரூ.1,500 கோடியில் அமைக்கப்படுகிறது

கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா - ரூ.1,500 கோடியில் அமைக்கப்படுகிறது
கே.ஆர்.எஸ். அணை பகுதியில், பொழுதுபோக்கு பூங்கா ரூ.1,500 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு பூங்கா (டிஸ்னிலேண்ட்) அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கே.ஆர்.எஸ். முன்பு உள்ள பிருந்தாவன் பூங்கா புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும்.


கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா மற்றும் புதிய பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட ‘வியூவிங் டவர்’ அமைக்கப்படும். பொழுதுபோக்கு பூங்காவில் காவிரித்தாய் மற்றும் கிருஷ்ணராஜ உடையார் சிலைகளும் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கே.ஆர்.எஸ். அணையில் 20-ந் தேதி குமாரசாமி சிறப்பு பூஜை செய்கிறார்
தொடர் கனமழையால் 118 அடியை எட்டிய கே.ஆர்.எஸ். அணையில் வருகிற 20-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பூஜை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. கே.ஆர்.எஸ். அணை 100 அடியை தாண்டியது கபினியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைந்தது
கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 23,424 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.