தேசிய செய்திகள்

வசுந்தரா ராஜே சிந்தியா பற்றிய தனிப்பட்ட விமர்சனம்: சரத் யாதவ் வருத்தம் தெரிவித்தார் + "||" + Vasundhara Raje Scindia personal review about: Sarath Yadav has expressed regret

வசுந்தரா ராஜே சிந்தியா பற்றிய தனிப்பட்ட விமர்சனம்: சரத் யாதவ் வருத்தம் தெரிவித்தார்

வசுந்தரா ராஜே சிந்தியா பற்றிய தனிப்பட்ட விமர்சனம்: சரத் யாதவ் வருத்தம் தெரிவித்தார்
வசுந்தரா ராஜே சிந்தியா பற்றிய தனிப்பட்ட விமர்சனத்திற்கு, சரத் யாதவ் வருத்தம் தெரிவித்தார்.
புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஐக்கிய ஜனதாதளம் முன்னாள் தலைவர் சரத் யாதவ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே குண்டாக இருப்பதாக கூறினார்.

அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் வசுந்தரா புகார் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பிருந்தா கரத்தும் சரத் யாதவுக்கு கண்டனம் தெரிவித்தார்.


இந்நிலையில், தனது தனிப்பட்ட விமர்சனத்துக்கு சரத் யாதவ் நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “வசுந்தராவுடன் நீண்ட கால குடும்ப உறவு எனக்கு உள்ளது. எனது வார்த்தைகள் அவரை காயப்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபற்றி அவருக்கு கடிதம் எழுதுவேன்” என்றார்.