தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்: கருத்துக்கணிப்புகள் அப்படியே பலிக்குமா?: கடந்த கால வரலாறு என்ன? ருசிகர தகவல்கள் + "||" + 5 state assembly elections: Will surveys be sacrificed?: What is the history of the past? Tasteful information

5 மாநில சட்டசபை தேர்தல்: கருத்துக்கணிப்புகள் அப்படியே பலிக்குமா?: கடந்த கால வரலாறு என்ன? ருசிகர தகவல்கள்

5 மாநில சட்டசபை தேர்தல்: கருத்துக்கணிப்புகள் அப்படியே பலிக்குமா?: கடந்த கால வரலாறு என்ன? ருசிகர தகவல்கள்
5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், அது அப்படியே பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், கடந்த கால வரலாறு குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,

மினி பொதுத்தேர்தல் என்று அழைக்கப்படக்கூடிய அளவில் நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அது பாரதீய ஜனதா கட்சிக்கு சற்றே கலக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. அந்தக் கட்சி ஆட்சி நடந்துவரும் 3 மாநிலங்களில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் அந்தக் கட்சிக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டியில் இழுபறி ஏற்படும், தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் டி.ஆர்.எஸ். கட்சி வெற்றி பெறும், மிசோரமில் தொங்கு சட்டசபை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.


அதே நேரத்தில் இந்த கருத்துக்கணிப்புகள் அப்படியே பலிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

கருத்துக்கணிப்புகள் குறித்த கடந்த கால வரலாறு பற்றிய ஒரு பார்வை இது:-

உத்தரபிரதேச சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு மொத்தம் உள்ள 404 இடங்களில் 193 இடங்கள் கிடைத்து தனிப்பெரும் கட்சியாக உருவாகும்; காங்கிரஸ்- சமாஜ்வாடி கூட்டணிக்கு 120 இடங்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 78 இடங்களும் கிடைக்கும் என கருத்துகணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் முடிவில், பாரதீய ஜனதா கட்சி 312 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.; காங்கிரஸ்- சமாஜ்வாடி கூட்டணிக்கு 54 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19 இடங்களும்தான் கிடைத்தன.

அதே ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 43 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறினாலும், 57 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 23 இடங்கள் கிடைக்கும் என கூறியபோது கிடைத்தது 11 இடங்கள்தான்.

117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால் கிடைத்ததோ 20.

அங்கு காங்கிரசுக்கு 55 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறினாலும், அந்தக் கட்சி 77 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அகாலிதளம் 7 இடங்களில் ஜெயிக்கும் என கூறப்பட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன.

மத்திய பிரதேச சட்டசபைக்கு 2013-ல் நடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 115 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால் அந்தக் கட்சி 165 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறினாலும், கிடைத்த இடங்கள் 58 தான்.

அப்போது ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 125 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. ஆனால் அந்தக் கட்சி 163 இடங்களில் அபார வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 55 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறியபோது, அந்தக் கட்சி இறுதியில் 21 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

இதேபோன்று சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு முறையே 52, 35 இடங்கள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால் அவற்றுக்கு கிடைத்த இடங்கள் 49, 39.

கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெறும், காங்கிரஸ் கூட்டணிக்கு 100-120 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின.

ஆனால் தேர்தல் முடிவுகள் கணிப்பையெல்லாம் புரட்டிப்போட்டு விட்டன. பாரதீய ஜனதா கூட்டணிக்கு 300-க்கு மேற்பட்ட இடங்கள் கிடைத்தன. அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பலத்துக்கான 272-க்கும் கூடுதலான இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

எனவே 5 மாநில சட்டசபை கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்குமா என்பது நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) மாலை தெரிய வரும்.ஆசிரியரின் தேர்வுகள்...