தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் - மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு + "||" + GST 3 months to file an account - Central Finance Ministry notice

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் - மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் - மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி, மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு சேவை வரியின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகர்கள் 2017-18-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த தேதி மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய நிதித்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள ‘மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்’ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜி.எஸ்.டி.ஆர்-9, ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ, ஜி.எஸ்.டி.ஆர்-9சி ஆகிய விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜி.எஸ்.டி. வலைதளத்தில் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு, ஆந்திராவில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது.