தேசிய செய்திகள்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது - யஷ்வந்த் சின்ஹா + "||" + Second term for the Modi government would prove to be disastrous for the people

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது - யஷ்வந்த் சின்ஹா

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது -  யஷ்வந்த் சின்ஹா
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் எங்கும் இருக்காது எனவும் யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா தோல்வியை தழுவியது குறித்து யஷ்வந்த் சின்ஹா பேசுகையில்,   “மோடியின் ஏற்றுக்கொள்ளமுடியாத மாயாஜால கோட்பாட்டை தேர்தல் முடிவுகள் அழித்துள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தலில்  எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் சேர வழிவகுத்து இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.  

தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை எதிர்க்கட்சிகள் வலுவாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய யஷ்வந்த் சின்ஹா மோடி அரசு குறித்து பேசுகையில், பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறை ஆட்சியளிக்க வாய்ப்பு வழங்கினால் மக்களுக்கு அது பேரழிவாகும் என்பது நிரூபனம் ஆகும்.  நாட்டில் எங்கும் ஜனநாயகம் இருக்காது என்று கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை பா.ஜனதா அரசியலுக்காக பயன்படுத்துகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார். 
 
பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றாக இணைக்கும் விவகாரத்தில் முக்கிய பணியை செய்வீர்களா? என்ற கேள்விக்கு இது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்தது என்று பதிலளித்துள்ளார். 1998-2004-ல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா கட்சிலிருந்து விலகிவிட்டார். பிரதமர் மோடியையும், இப்போதைய பா.ஜனதா நடவடிக்கையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒருங்கிணைந்த இந்தியா’ கூட்டம், பா.ஜனதாவின் எதிர்காலம் குறித்து மம்தாவின் கணிப்பு
கொல்கத்தாவில் நாளை மறுநாள் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறவுள்ளது.
2. அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் -பா.ஜனதா தகவல்
அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது.
3. கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கோவிலில் ரூ.92.22 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
4. ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை : மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி -பா.ஜனதா குற்றச்சாட்டு
ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை என்றும், மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது.
5. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.