தேசிய செய்திகள்

“எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன்,” விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் -ராகுல் காந்தி + "||" + Taking inputs from MLAs, party workersRahul Gandhi says CMs for 3 states to be announced soon

“எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன்,” விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் -ராகுல் காந்தி

“எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன்,” விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் -ராகுல் காந்தி
“எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன்,” விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் (வசுந்தரா ராஜே சிந்தியா), மத்திய பிரதேசம் (சிவராஜ் சவுகான்), சத்தீஷ்கார் (ராமன் சிங்) ஆகிய 3 மாநிலங்களிலும், ஆட்சியை தக்க வைக்க தவறியது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சி அமைப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. முதல்-மந்திரி யார்? என்பதில் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதேபோன்று  மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்,  ஜோதிர் ஆதித்யா சிந்தியா இடையே போட்டி நிலவுகிறது. சத்தீஷ்காரில் டாம்ரத்வாஜ் சாகு என்ற எம்.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல்-மந்திரி பதவி போட்டியில் அவரும், மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேலும், மூத்த தலைவர் டி.எஸ்.சிங்தேவும் உள்ளனர்.

மூன்று மாநிலங்களிலும் முதல்-மந்திரி தேர்வில் கடும் போட்டி நிலவுவதால் யாரை தேர்வு செய்வது என்ற பொறுப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் சென்றுள்ளது.

இதற்கிடையே ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், மத்திய பிரதேசத்தில் கமல்நாத்திற்கும்,  சத்தீஷ்காரில் பூபேசுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வெற்றியில் இளம் தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே கட்சி தலைமைக்கு பெரும் சவால் உள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக பேசுகையில்,  “கட்சியின் பல்வேறு மட்டத்திலிருந்து கருத்துக்களை பெற்று வருகிறேன். நாங்கள் எம்.எல்.ஏ.க்கள் முதல் அடிப்படை தொண்டர்கள் வரையில் கருத்துக்களை பெறுகிறோம். நீங்கள் விரைவில் புதிய முதல்-மந்திரிகளை பார்ப்பீர்கள்,” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கவலைப்பட வேண்டாம் எடியூரப்பா சொல்கிறார்
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் என்றும், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கவலைப் பட வேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
2. தேசிய அளவில் காங்கிரஸ்–இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை முத்தரசன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என முத்தரசன் கூறினார்.
3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மூன்று பேர் கலந்து கொள்ளவில்லை; பா.ஜனதா மீது சித்தராமையா சாடல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
4. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய 3 பேர் நியமனம் : மந்திரி பதவி வழங்கவும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த மந்திரிகள் உள்பட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிருப்தியாளர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவிப்பு
உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.