மாநில செய்திகள்

2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் + "||" + For 2 days Delta counties and southern Tamil Nadu Many places have a chance to rain- Chennai Weather Center

2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளுக்கு நாளை முற்பகல் வரை செல்ல வேண்டாம்.

காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. சென்னையில், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளது.

மீனவர்கள் நாளை முற்பகல் வரை மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். 2 நாட்களுக்கு மழை இருந்தாலும், அதன் பிறகு படிப்படியாக குறையும்.

ராமேஸ்வரத்தில் 4 செ.மீ., பாம்பனில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என கூறினார்.

கடலூர், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, ஆலப்பாக்கம், பரங்கிபேட்டை, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் பின்னர் கனமழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரங்களான ஜானகிபுரம், கோலியனூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் மேக மூட்டம் சூழ்ந்து இருண்டு காணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மழை பெய்தது.

புதுச்சேரியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 9 மணி முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நகர்ப்பகுதிகளான உப்பளம் , முதலியார்பேட்டை , நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, கிராமப்புறங்களான வில்லியனூர், பாகூர், திருபுவனை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.