தேசிய செய்திகள்

வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் : நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு + "||" + When tax increases increase GST Declines further: Finance Minister Arun Jaitley's announcement

வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் : நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு

வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் : நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு
வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி 18 மாத ஜி.எஸ்.டி. செயல்பாடு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி.யில் 1,216 பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படும் 183 பொருட்களுக்கு 0 சதவீதமும், 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது 28 சதவீத வரி முடிவுபெறும் நிலையில் உள்ளது.

சினிமா டிக்கெட் வரி 35 மற்றும் 110 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சொகுசு வாகனங்கள், ஏர்கண்டி‌ஷனர்கள், குளிர்பானங்கள், பெரிய டி.வி.க்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 18 மற்றும் 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

சிமெண்டு மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டும் தொடர்ந்து 28 சதவீத வரிவிகிதத்தில் உள்ளன. மற்ற அனைத்து கட்டுமான பொருட்களின் வரிவிகிதம் ஏற்கனவே 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனாலும் முதல் வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் முதல் 6 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. முதல் வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.89,700 கோடியாக இருந்தது. 2–வது வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.97,100 கோடியாக உள்ளது.

ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் கணிசமாக உயரும்போது வரிவிகிதம் மேலும் குறைக்கப்படும். நாட்டில் இறுதியாக ஜி.எஸ்.டி.யில் 0 மற்றும் 5 சதவீதம் ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும்.

ஆடம்பர பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இதில் விதிவிலக்கானவை. அவைகளுக்கு 18 மற்றும் 12 சதவீதங்களுக்கு பதிலாக ஒரு புதிய வரிவிகிதம் உருவாக்கப்படும். இதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் - அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம்
உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
2. ‘‘கருத்துக்கணிப்பு முடிவு போலவே தேர்தல் முடிவுகள் அமையும்’’ அருண் ஜெட்லி நம்பிக்கை
கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு
இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
4. ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 காங்கிரஸ் அறிவிப்பு ஏமாற்று வேலை -அருண் ஜெட்லி விமர்சனம்
ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 என்ற காங்கிரஸ் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என்று அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.
5. அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வருவாய், இலக்கை தாண்டி சாதனை - அருண் ஜெட்லி
அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வருவாய், இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது என நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார்.