தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் சுமுக தீர்வு காண தமிழக, கர்நாடக முதல்-மந்திரிகள் கூட்டம் குமாரசாமியிடம் நிதின் கட்காரி தகவல் + "||" + To find a solution to the megadhathu dam issue Tamilnadu, Karnataka chief ministers meeting

மேகதாது அணை விவகாரத்தில் சுமுக தீர்வு காண தமிழக, கர்நாடக முதல்-மந்திரிகள் கூட்டம் குமாரசாமியிடம் நிதின் கட்காரி தகவல்

மேகதாது அணை விவகாரத்தில் சுமுக தீர்வு காண தமிழக, கர்நாடக முதல்-மந்திரிகள் கூட்டம் குமாரசாமியிடம் நிதின் கட்காரி தகவல்
மேகதாது அணை விவகாரத்தில் சுமுக தீர்வு காண தமிழக-கர்நாடக மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியிடம் உறுதி அளித்து உள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இத தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.


இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பகல் 1.30 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் குமாரசாமி நேற்று மாலை மத்திய நீர்ப்பாசனம் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, மேகதாது திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து நிதின் கட்காரியிடம் குமாரசாமி தெரிவித்தார். மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதால், கர்நாடகத்தைவிட தமிழகத்திற்கு தான் அதிக பயன் என்றும் இதுகுறித்து தமிழகத்திற்கு உண்மை நிலையை எடுத்துக்கூறி இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காண வசதியாக தமிழகம் மற்றும் கர்நாடக முதல்-மந்திரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குமாரசாமி கோரிக்கை வைத்தார்.

குமாரசாமியின் இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய மந்திரி நிதின் கட்காரி தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இருமாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

கர்நாடக அரசு நேற்று மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் இருக்கும் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று இரவு அங்குள்ள கர்நாடக பவனில் தங்கினார்.

இன்று (வியாழக்கிழமை) மாலையில் குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி - கவர்னர் உரையில் தகவல்
மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பதாக கவர்னர் வஜூபாய்வாலா தனது உரையில் தெரிவித்துள்ளார்.
2. மேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு
மேகதாது அணை பற்றிய வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்து உள்ளது.
3. மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
4. மேகதாது அணை விவகாரம் தமிழக தலைவர்கள் அரசியல் ஆக்குகிறார்கள் நாங்கள் சட்ட திட்டங்களை மதிக்கிறோம் கர்நாடக மந்திரி சிவக்குமார் தந்தி டி.வி.க்கு பரபரப்பு பேட்டி
மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் சட்ட திட்டங்களை மதித்து நடக்கிறோம் என்று தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கர்நாடக மாநில நீர்ப்பாசன துறை மந்திரி சிவக்குமார் கூறினார்.
5. மேகதாது அணை கட்ட அனுமதி: மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், விவசாயிகள் ஊர்வலம்
மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர்.