தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தொடர்பில் இருப்பதாக பாஜக தகவல் + "||" + BJP MLA claims 15 Cong-JDS MLAs in touch with him; Cong

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தொடர்பில் இருப்பதாக பாஜக தகவல்

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தொடர்பில் இருப்பதாக பாஜக தகவல்
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. இதில் மந்திரிசபையில் இருந்து மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

புதிதாக 8 மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மந்திரி பதவி பறிக்கப்பட்டதாலும், மந்திரி பதவி கிடைக்காததாலும் மாநிலத்தில் உள்ள ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக பரவலாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி, கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி வருகிறது. 

இந்த நிலையில், ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியில் உள்ள 15 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ. உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார். மேலும் உமேஷ் கட்டி கூறும்போது, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தால் வரவேற்பதாகவும், அடுத்த வாரத்தில் பாஜக தலைமையில் புதிய அரசு அமையும் எனவும் தெரிவித்தார். 

ஆனால், உமேஷ் கட்டி எம்.எல்.ஏவின் கூற்றை திட்டவட்டமாக மறுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தினேஷ் குண்டு ராவ், மக்களை குழப்புவதற்காக கற்பனையான அறிக்கைகளை பாஜகவினர் வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் இன்றைய சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகா: ஆடியோ விவகாரம் - குமாரசாமி குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு
மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,வுக்கு லஞ்சம் வழங்க, பேரம் பேசியது தொடர்பாக எழுந்த புகாரை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
3. மஜத கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறும் ஆடியோ வெளியீடு: கர்நாடக அரசியலில் பரபரப்பு
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.
4. கர்நாடகத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,007 கோடி நிதி - கவர்னர் உரையில் தகவல்
கர்நாடகத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,007 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளது.
5. கர்நாடக அரசியலில் மீடியாக்கள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடக அரசியலில் மீடியாக்கள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறது என சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.