மாநில செய்திகள்

திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு + "||" + Petition Filed To Postpone The Date Of By election In Thiruvarur

திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

திருவாரூரில் 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மனு அளித்தார். கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரத்தின் செயல்விளக்கம்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரத்தின் செயல்விளக்கத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
2. தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் வழியே கோரிக்கை விடுத்துள்ளது.
3. 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன - வாட்ஸ் அப் பகீர் தகவல்
2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
4. பாராளுமன்ற தேர்தல்: சட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து உள்ளது.
5. தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு -தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...