மாநில செய்திகள்

பொங்கல் வேட்டி- சேலைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு + "||" + Pongal dhoti and saris Delay without delay District collectors Tamil Nadu Government Order

பொங்கல் வேட்டி- சேலைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

பொங்கல் வேட்டி- சேலைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் புகார் வராமல் பொங்கல் வேட்டி சேலைகளை தகுதியானவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,

இதுகுறித்து வருவாய் துறை ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சத்தியகோபால், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கடந்த 3-ந்தேதி முதல் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை தகுதி உள்ள பயனாளிகளுக்கு முறையாக வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு காணொலிக்காட்சி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.


இலவச வேட்டி- சேலை வினியோக மையங்களை கலெக்டர்கள், காவல்துறை மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் புகார்கள் வராமல் முறையாக வழங்க வேண்டும்.

இலவச வேட்டி, சேலை பெறுபவர்களின் பெயர்களை ரேஷன் கடைகள், கிராம பஞ்சாயத்துகள், கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்க முடியும். மாறாக தகுதி இல்லாதவர்களுக்கு வழங்க கூடாது.

பதிவேடுகளில் உள்ளப்படி தான் வேட்டி, சேலைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று அனைத்து தாசில்தார்களுக்கும் கலெக் டர்கள் அறிவுரை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இலவச வேட்டி, சேலை பண்டல்களில் முத்திரை பதித்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண் டும். பொதுமக்களுக்கு முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதை பறக்கும் படைகள் அமைத்து கலெக் டர்கள் கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தமிழ்நாடு ஜவுளி கார்ப்பரேஷனில் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி- சேலை பண்டல்களில், பட்டியல்களில் உள்ளப்படி வேட்டி, சேலைகள் இருக்கிறதா? என்பதையும் சரி பார்க்க வேண்டும்.

பிர்கா அளவில் மண்டல குழுக்களை அமைத்து வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தாலுக் காவிலும் ஒரு துணை கலெக்டரை நியமித்து பணியை கண்காணிக்க வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு முழுமையாக வினியோகம் செய்யப்பட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பண்டல்கள் குறியீட்டு அடிப்படையில் வழங்க வேண்டும். இதன் மூலம் திருட்டு போவதையும், விற்பனை செய்யப்படுவதையும் கண்டறிய முடியும். இந்தப்பணியை வரும் 31-ந்தேதிக்குள் முடித்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.