மாநில செய்திகள்

தோல்வி பயத்தால் தான் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + The defeat of the AIADMK The government did not hold local elections MK Stalin's speech

தோல்வி பயத்தால் தான் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தோல்வி பயத்தால் தான் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தோல்வி பயத்தால் தான் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்று தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருச்சி, 

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டி, மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஆகிய இடங்களில் நேற்று காலை தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

கிராம மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதனை தீர்த்துவைப்பதற்காக ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திவருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள 12,617 ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று மக்கள் உணர்வுகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் எல்லா கிராமத்துக்கும் நானே செல்ல முடியாது என்பதால் தான் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஆட்சியில் தமிழ்நாடு மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நான் 50 வருடமாக பொதுவாழ்வில் இருந்துவருகிறேன். காமராஜர் முதல் எல்லா முதல்- அமைச்சர்களையும் பார்த்து இருக்கிறேன். எனது அரசியல் வாழ்வில் எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு முதல்- அமைச்சரை பார்த்ததில்லை.

ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்திவருபவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு பற்றி இப்போது அவர்களுக்குள்ளே குழப்பம் வந்துவிட்டது. சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என கூறி இருக்கிறார். ஜெயலலிதா இறப்பு பற்றி ஆறுமுகசாமி ஆணையம் நடத்தும் விசாரணை ஒரு நாடகம் என்பது இதன்மூலம் தெரிந்துவிட்டது.

ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அவருக்கு இதுவரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தக்கூட அவர்களுக்கு யோக்கியதை இல்லை. இது தான் இந்த ஆட்சியின் லட்சணம்.

நாடாளுமன்றத்துக்கு இன்னும் சில மாதங்களில் வரப்போகும் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால் தான் உருப்படும் என தமிழக மக்கள் நினைக்கிறார்கள். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதற்கு முன்னதாக வரலாம். இங்கு பேசியவர்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாதது பற்றி குறிப்பிட்டார்கள்.

இதற்கு காரணம் என்ன? உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது தான். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்ற தோல்வி பயத்தினால் தான் ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் திட்டமிட்டே பொய்யான காரணங்களை கூறி தள்ளிவைத்து வருகிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

நான் முதல்-அமைச்சராக இருந்தால் மகளிர் சுயஉதவி குழுக்களை எனது கையில் தான் வைத்து இருப்பேன். தி.மு.க. ஆட்சியின்போது கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை அவரது உடலில் செலுத்திய கொடுமை நடந்துள்ளது.

ஆனால் இதைப்பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள கேடுகெட்ட ஆட்சிகளை அகற்றுவதற்கான மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். ஒரே நேரத்தில் 2 ஆட்சிகளையும் அகற்ற இந்த ஊராட்சி சபை கூட்டங்கள் பயன்படும்.

கேரளாவில் உள்ள ஒரு அமைப்பு அகில இந்திய அளவில் சிறந்த மனிதனாக என்னை தேர்வுசெய்து விருது வழங்குவதாக அறிவித்தது. அந்த விருதினை பெறுவதற்கு நான் நேரில் செல்லவில்லை. ஆர்.எஸ்.பாரதியை அனுப்பிவிட்டு உங்களிடம் விருது வாங்குவதற்காக வந்து இருக்கிறேன். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இந்த கூட்டம் தி.மு.க. ஆட்சி அமைவதற்கான தொடக்கப்புள்ளியாக அமையட்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் என அரவக்குறிச்சியில் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை தூத்துக்குடி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு - மு.க.ஸ்டாலின் பேச்சு
ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
4. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் -மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்போது மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமைகின்றபோது, மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.