மாநில செய்திகள்

பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை-தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + There is never a coalition with the BJP DMK leader MK Stalin's announcement

பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை-தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை-தி.மு.க தலைவர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பா.ஜ.கவுடன் ஒரு போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
சென்னை

பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி கூறியதற்கு, பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி, பழைய நண்பர்களுக்கு கூட்டணி வைப்பதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில் கூறி இருப்பதாவது:-

பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று ஆணித்தரமாக சொல்கிறேன். பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல; அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆரோக்கியமான கூட்டணியுமல்ல. நாட்டை பிளவுபடுத்தும் எந்த திட்டத்தையும் முன்வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது. வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
2. கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
3. பொங்கல் பரிசு வழங்க கூடாது என்ற தி.மு.க.வின் சதி தவிடு பொடியாகி விட்டது -ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க கூடாது என்ற தி.மு.க.வின் சதி தவிடு பொடியாகி விட்டது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
4. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கூறினார்.
5. தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்
தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.