தேசிய செய்திகள்

உ.பி.யில் தனியாக போட்டியிட தயார் - காங்கிரஸ் + "||" + Cong ready to go it alone in UP, says state leader

உ.பி.யில் தனியாக போட்டியிட தயார் - காங்கிரஸ்

உ.பி.யில் தனியாக போட்டியிட தயார் - காங்கிரஸ்
உ.பி.யில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 71 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்கிறது.  மெகா கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது. 

சமாஜ்வாடி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிராண்மொய் நந்தா பேசுகையில், உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்க எங்களது கூட்டணியே போதும். காங்கிரஸ் தேவையில்லை. உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு முக்கியமற்ற கட்சியாகும். எனவே அதனை இணைப்பது தொடர்பாகவும், நீக்குவது தொடர்பாகவும் எதனையும் நாங்கள் யோசிக்கவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால் இரண்டு தொகுதிகள் வழங்கப்படும், இதுதொடர்பக காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் உ.பி.யில்தான் உள்ளது. இந்த இரு தொகுதிகளில் வேண்டுமென்றால் காங்கிரஸ் போட்டியிட்டுக்கொள்ளலாம் என்று மறைமுகமாக கூறினார். இப்போது காங்கிரஸ் இல்லாமல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உ.பி.யில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் பாக்‌ஷி கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கவலைப்பட வேண்டாம் எடியூரப்பா சொல்கிறார்
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் என்றும், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கவலைப் பட வேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
2. தேசிய அளவில் காங்கிரஸ்–இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை முத்தரசன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என முத்தரசன் கூறினார்.
3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மூன்று பேர் கலந்து கொள்ளவில்லை; பா.ஜனதா மீது சித்தராமையா சாடல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
4. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய 3 பேர் நியமனம் : மந்திரி பதவி வழங்கவும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த மந்திரிகள் உள்பட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிருப்தியாளர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவிப்பு
உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.