தேசிய செய்திகள்

சிபிஐ மோதல்: லஞ்ச வழக்கை ரத்து செய்யக்கோரிய ராஜேஷ் அஸ்தானாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி + "||" + Court Rejects CBI No2 Rakesh Asthanas Petition To Cancel Bribery Case

சிபிஐ மோதல்: லஞ்ச வழக்கை ரத்து செய்யக்கோரிய ராஜேஷ் அஸ்தானாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சிபிஐ மோதல்: லஞ்ச வழக்கை ரத்து செய்யக்கோரிய ராஜேஷ் அஸ்தானாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
லஞ்ச வழக்கை ரத்து செய்யக்கோரிய ராஜேஷ் அஸ்தானாவின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. மொயின் குரேஷியிடம் இருந்து தரகர் வழியாக ராகேஷ் அஸ்தானா ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என புகார் எழுந்தது. இதில் திடீர் திருப்பமாக, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இடையிலான பனிப்போர் தொடர்ந்த நிலையில் இருவரையும் மத்திய அரசு விடுப்பில் அனுப்பியது. அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டு சென்ற நிலையில், ராகேஷ் அஸ்தானா ஐகோர்ட்டை நாடினார். 

லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்த ராகேஷ் அஸ்தானா, எனக்கு எதிராக எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.  இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, லஞ்ச வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இவ்வழக்கில் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.-ஐ ரத்து செய்யக்கோரியதையும் ஐகோர்ட்டு நிராகரித்தது. ராகேஷ் அஸ்தானா மற்றும் தேவேந்திர குமாருக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் சிபிஐக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லஞ்ச வழக்கில் கைதான சேலம் கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
லஞ்ச வழக்கில் கைதான சேலம் அரசு போக்கு வரத்து கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.