தேசிய செய்திகள்

பத்திரிகையாளர் கொலை வழக்கு:குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி சிபிஐ கோர்ட் அறிவிப்பு + "||" + Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim convicted; quantum of punishment to be handed out on Jan 17

பத்திரிகையாளர் கொலை வழக்கு:குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி சிபிஐ கோர்ட் அறிவிப்பு

பத்திரிகையாளர் கொலை வழக்கு:குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி சிபிஐ கோர்ட் அறிவிப்பு
பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என சிபிஐ கோர்ட் அதிரடியாக தீர்ப்பு கூறி உள்ளது.
புதுடெல்லி

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங்  20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு அரியானா சனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இந்த நிலையில் செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை வழக்கு  பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த வழக்கில்  குர்மீத் ராம் ரகீம் சிங்கை கோர்ட் குற்றவாளி என தீர்ப்பு கூறி உள்ளது. தண்டனை வருகிற 17ந்தேதி அறிவிக்கப்படும் என கூறி உள்ளது.

தேராவில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். 15 வருடங்களுக்கு முன்னர் பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக ஆசிரமங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதிய அவர் படுகொலை செய்யப்பட்டார். குர்மீத் சிங்கால் பெண் பக்தர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடர்பாக விளக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை பத்திரிக்கையில் வெளியிட்டார். இந்நகர்வே குர்மீத் ராமிற்கு எதிரான நடவடிக்கைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

இதனையடுத்து 2002-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் 24-ம் தேதி செய்தியாளர் சத்ரபதி சுட்டுக் கொல்லப்பட்டார். 

இவ்விவகாரம் தொடர்பான சட்ட போராட்டமானது செய்தியாளர் மகனால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2003: முக்கிய சாட்சியான செய்தியாளரின் மகன் அன்சுல் சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தார்.

நவம்பர் 2003: சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.  ஜூலை 2007: தேரா தலைவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.  

நவம்பர் 2014: ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.