கிரிக்கெட்

பாண்ட்யா, லோகேஷ் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்பு + "||" + Hardik Pandya and KL Rahul likely to miss ODI series against Australia pending enquiry BCCI official

பாண்ட்யா, லோகேஷ் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்பு

பாண்ட்யா, லோகேஷ் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்பு
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பாண்ட்யா, லோகேஷ் ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்களுடனான தங்களது பாலியல் பழக்கம் குறித்து வெளிப்படையாக கூறிய சில வி‌ஷயங்கள் சர்ச்சையாக கிளம்பியது. அவர்களது கருத்துக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. தன்னுடைய கருத்துக்கு ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கோரினார்.  

சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கிரிக்கெட் வாரியத்தின் நோட்டீசுக்கு பதில் அளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா அதில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இருப்பதுடன், எதிர்காலத்தில் இது போன்று நடக்காதவாறு பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளித்தார்.

ஆனால் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் தடைவிதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டித் தலைவர் வினோத் ராய் பேசுகையில், “ஹர்திக் பாண்ட்யாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை. இரண்டு வீரர்களுக்கும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன். இருப்பினும், இவ்விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது பற்றி  பிசிசிஐயின் சட்டக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், டயானா எடுல்ஜிதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார். 

இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது என்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில்  பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பாண்ட்யா, லோகேஷ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் விசாரணை முடியும் வரையில் சஸ்பெண்ட் செய்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டக்குழு வாய்ப்பு வழங்கியுள்ளது. விசாரணையை முடிக்க 6 மாத காலங்கள் வரையில் பிடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்
பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2. பாண்ட்யா, கே.எல் ராகுல் சர்ச்சை கருத்து: ”பாடம் கற்றுக்கொண்டேன்” கரண் ஜோஹர் கருத்து
பாண்ட்யா, கே.எல் ராகுல் சர்ச்சை கருத்துக்களை கூறிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரண் ஜோஹர் இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
3. ‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள்
‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சி.கே.கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பாண்ட்யா, லோகேஷ் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்க பரிந்துரை
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததன் விளைவாக ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
5. பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கேட்டார்; பிசிசிஐ நோட்டீஸ்
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கேட்டுள்ளார்.