தேசிய செய்திகள்

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு + "||" + Madras HC refuseds to Balakrishna Reddy suspension of conviction in riot case

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
 
1998-ல் கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்ததும், அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.  மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி சிறை தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ. என மக்கள் பிரதிநிதி பதவிகள் தானாகவே பறிபோய்விடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி அன்றைய தினமே ராஜினாமா செய்தார்.

மேல்மூறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.
2. மதுபான விடுதி, ஓட்டல்களில் வயது குறைந்தவர்கள் மது குடிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்
மதுபான விடுதி, ஓட்டல்களில் வயது குறைந்தவர்கள் மதுகுடிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்ய மெரினா கடற்கரையில் தினமும் நடைப்பயிற்சி செல்ல வேண்டும் மாநகராட்சி ஆணையருக்கு, ஐகோர்ட்டு அறிவுரை
கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய போலீஸ் கமிஷனருடன், சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் காலையில் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.
4. சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கலாம் ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல்
சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக மட்டும் இரண்டு நாட்களை ஒதுக்கலாம் என ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.
5. சபரிமலையில் பிரச்சனை செய்தது கிரிமினல்கள்தான்; காவல்துறையினர் கிடையாது - கேரள அரசு விளக்கம்
சபரிமலையில் பிரச்சனை செய்தது கிரிமினல்கள்தான் என்றும் காவல்துறையினர் கிடையாது என்றும் கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.