உலக செய்திகள்

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல் + "||" + Mexico border wall issue: Emergency Declaration in the United States - Trump Success Information

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல்

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல்
மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தபோது, டிரம்ப் வெளி நடப்பு செய்தார்.


இந்த நிலையில் தெற்கு எல்லையையொட்டி உள்ள டெக்சாஸ் மாகாணத்துக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், “ஆம், அது பற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். நாம் அதை விரைவாக செய்ய வேண்டும். ஏனெனில் அது மட்டும்தான் தீர்வு. அதற்கு செலவு கிடையாது. நாம் ஆண்டு தோறும் எல்லை பாதுகாப்புக்கு செலவிடுவதை விட, சுவருக்கு குறைந்த செலவுதான் ஆகும்” என தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி
கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரத்தில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
2. காவலாளியே திருடன் என கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது என தவறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில், ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
3. எதிர்க்கட்சிகள் விவகாரத்தில் ‘தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் தொடர்பான விவகாரங்களில் தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
4. உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: பஞ்சாப் அணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் எதிரொலியாக அந்த அணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
5. வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த விவகாரம்: அ.தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த விவகா ரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.