தேசிய செய்திகள்

காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டி - “எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என்றும் அறிவிப்பு + "||" + IAS officer resigns in Kashmir The official declares that the contest "will not join any party"

காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டி - “எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என்றும் அறிவிப்பு

காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டி - “எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என்றும் அறிவிப்பு
காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டியிட உள்ளார், மேலும் அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பேசல். 35 வயதான இவர், 2009-ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்த முதலாவது காஷ்மீரி என்ற பெருமையை பெற்றவர். கடந்த 9-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார். காஷ்மீர் மக்கள் கொல்லப்படுவதற்கும், முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.


இந்நிலையில், ஷா பேசல் நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இப்போதைக்கு சேர மாட்டேன் என்றும் அவர் கூறினார். பிரிவினைவாத ஹூரியத் மாநாடு இயக்கத்தில் தனது ஆட்சிப்பணி அனுபவம் பயன்படாது என்பதால், அதில் சேர மாட்டேன் என்றும் ஷா பேசல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை விதிப்பு: மத்திய அரசு மீது காஷ்மீர் கட்சிகள் பாய்ச்சல்
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை விதித்ததை காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
3. காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: லஸ்கர் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், லஸ்கர் இ தொய்பா தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் பலியானார்கள்.
4. காஷ்மீரில் பிப்ரவரி மாதம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதா, இந்திய ஹெலிகாப்டர்? - பரபரப்பு தகவல்கள்
காஷ்மீரில் பிப்ரவரி மாதம் தவறுதலாக இந்திய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
5. காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவம் பதிலடி
காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.