தேசிய செய்திகள்

சிக்கிம் மாநிலம்: பனிப்பொழிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகள் - ராணுவ வீரர்கள் மீட்பு + "||" + Sikkim State: 150 tourists stranded in snowfall - Soldiers recovery

சிக்கிம் மாநிலம்: பனிப்பொழிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகள் - ராணுவ வீரர்கள் மீட்பு

சிக்கிம் மாநிலம்: பனிப்பொழிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகள் - ராணுவ வீரர்கள் மீட்பு
சிக்கிம் மாநிலத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகளை ராணுவ வீரர்கள் மீட்டனர்.
கொல்கத்தா,

சிக்கிம் மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான லசாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு 11 குழந்தைகள், 34 பெண்கள் உள்பட 150 பேர் சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து அனைவரும் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராணுவ முகாம்களில் அனைவருக்கும் முதலுதவி மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் சென்ற 43 வாகனங்களில், 23 வாகனங்கள் மீட்கப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி சிக்கிமில் உள்ள நாதுலா பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூரில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி
திருவாரூரில் நேற்று கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
2. கோத்தகிரியில் பனிப்பொழிவு: தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணி மும்முரம்
கோத்தகிரியில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால், தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
3. இமாசலபிரதேசம்: பனிப்பொழிவில் சிக்கிய 45 ஐ.ஐ.டி. மாணவர்கள் மீட்பு
இமாசலபிரதேசத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 45 ஐ.ஐ.டி. மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
4. சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.