தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது: குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் இடைத்தரகர் மனு + "||" + Arrested in helicopter scam: The intermediary plea of the court seeking permission to speak to the family

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது: குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் இடைத்தரகர் மனு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது: குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் இடைத்தரகர் மனு
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர், தனது குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் மனு அளித்தார்.
புதுடெல்லி,

முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வகையில் ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


இந்நிலையில் அவர் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தினரிடமும், வக்கீல்களிடம் தொலைபேசியில் பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவுக்கு 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள
2. ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது
ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கி உள்ளார். இவர் இந்தி நடிகையை ஏமாற்றி கற்பழித்து பணமோசடி செய்ததும்தெரியவந்தது.
3. தூத்துக்குடி அருகே பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீர் கைது விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்
தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பிரபல ரவுடி கொலையில் 4 பேர் கைது பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
பிரபல ரவுடியை கொலை செய்த 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது
ஆவடியில் தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அருகில் படுத்து தூங்கிய அவரது மகளும் கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்.