தேசிய செய்திகள்

கண்ட்லா-தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து - மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர் + "||" + Cargo ship between Kandla-Thoothukudi - The central ministers started

கண்ட்லா-தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து - மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்

கண்ட்லா-தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து - மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்
கண்ட்லா-தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தினை மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்.
புதுடெல்லி,

நாட்டில் ஒரு இடத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மற்றொரு இடத்துக்கு சரக்கு பெட்டகங்கள் (கன்டெய்னர்) ரெயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் அதிக செலவு ஆவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நாட்டில் முதல் முறையாக உள்நாட்டு சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.


குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை டெல்லியில் நேற்று மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தில் இருந்து அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி மற்றும் ரெயில்வே, நிலக்கரித்துறை மந்திரி பியூஷ்கோயல் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இருமார்க்கமாக வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த கப்பல்களில் ஒரே நேரத்தில் 700 சரக்கு பெட்டகங்கள் எடுத்துச் செல்லப்படும் என்றும், மங்களூரு, கொச்சி துறைமுகங்கள் வழியாக இந்த கப்பல் பயணிக்கும் என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு ஒப்புதல்
சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.