தேசிய செய்திகள்

எந்த வரியையும் உயர்த்தாமல் ரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடி - அருண் ஜெட்லி பெருமிதம் + "||" + Rs 2 lakh crore tax cuts without raising any tax - Arun Jaitley is proud

எந்த வரியையும் உயர்த்தாமல் ரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடி - அருண் ஜெட்லி பெருமிதம்

எந்த வரியையும் உயர்த்தாமல் ரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடி - அருண் ஜெட்லி பெருமிதம்
எந்த வரியையும் உயர்த்தாமல் ரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மோடி அரசின் கொள்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அடைந்த பலன்கள்” என்ற தலைப்பில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை. மறைமுக வரிகள், ஜி.எஸ்.டி. என்ற பெயரில் இணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்தது.

மேலும், வருமான வரி செலுத்துவதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுதோறும் சலுகைகள் அளிக் கப்படுகின்றன. இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த வரியையும் உயர்த்தாமல், ஆண்டுதோறும் சுமார் ரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.