கிரிக்கெட்

இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா + "||" + Handscomb, Stoinis lift Australia to 288

இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை சேர்த்துள்ளது.
சிட்னி,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது

அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று  நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. 

கேப்டன் ஆரோன் பிஞ்ச் (6 ரன்கள்) புவனேஷ்குமார் பந்தில் கிளீன் போல்டு ஆனார். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், கணிசமாக ரன்களையும் சேர்க்கத்தவறவில்லை. அந்த அணியில் உஸ்மான் காவ்ஜா ( 59 ரன்கள்) , ஷான் மார்ஷ் (54 ரன்கள்), ஹேண்ட்ஸ்கோம்ப் ( 73 ரன்கள்)  என பொறுப்பான முறையில் ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.  மார்கஸ் ஸ்டாயின்ஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில், புவனேஷ் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி
பிரான்சில் ரபேல் விமான நிறுவனத்தின் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் (1999)
1999ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
3. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்
பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.
4. 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில் 37-வது தடவையாக ஓட்டு போட்டார்
இமாசலபிரதேசத்தை சேர்ந்த 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில், 37-வது தடவையாக ஓட்டு போட்டார்.
5. நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது, 60.21 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.