தேசிய செய்திகள்

கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பதால் எங்களுக்கு லாபம் எதுவும் இல்லை- மாயாவதி + "||" + BSP Chief Mayawati: Moreover, we won't gain anything by including Congress in our alliance.

கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பதால் எங்களுக்கு லாபம் எதுவும் இல்லை- மாயாவதி

கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பதால் எங்களுக்கு லாபம் எதுவும்  இல்லை- மாயாவதி
உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பதால் எங்களுக்கு லாபமில்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.
லக்னோ

வரும் பாராளுமன்றதேர்தலில்  உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ் வாதி கட்சியும் கூட்டணிவைத்து போட்டியிடுகின்றன.  இது தொடர்பாக பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும்  லக்னோவில் கூட்டாக இன்று பேட்டி அளித்தனர்.

பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:
 
* எங்களின் இன்றைய அறிவிப்பு  மோடிக்கும் , அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கப்போகிறது. ஏற்கனவே பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ் வாதி கட்சியும்  கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு உள்ளன.

 * நாட்டின் நலனுக்கா இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம். எங்களது இந்த கூட்டணியை பார்த்து பாஜக அஞ்சுகிறது.

* மோடி ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எங்களது கூட்டணியில் காங்கிரஸ் இல்லை. எங்கள் கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பதால்  எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. கடந்தகால  தேர்தல்களில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு  காங்கிரஸ் ஓட்டு மாறியது  இல்லை. 

*  பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. அமேதி, ரேபரேலியில் போட்டியிடவில்லை. மற்ற இரு இடங்கள் மற்ற கட்சிகளுக்காக.  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இவிஎம் ஹேக்கிங்: 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் -மாயாவதி கோரிக்கை
இவிஎம் ஹேக்கிங் சர்ச்சையை அடுத்து 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
2. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்
ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகளை அரசு பாராட்டி கவுரவித்து உள்ளது.
3. மாயாவதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் பாஜக பெண் எம்.எல்.ஏ
மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சாதனா சிங் எம்.எல்.ஏ, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
4. மாயாவதி பற்றி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. அவதூறு பேச்சு, போலீஸ் வழக்குப்பதிவு
மாயாவதி பற்றி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. அவதூறாக பேசியது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
5. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுக்க உள்ளது.