தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் மோசடி - ஊழலால் இந்தியா தோல்வி அடைந்தது - பிரதமர் மோடி + "||" + PM Narendra Modi at BJP National Convention in Delhi: The government before us pushed the country into darkness. It won't be wrong if I say that India lost 10 important years (2004-2014) in scams and corruption.

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் மோசடி - ஊழலால் இந்தியா தோல்வி அடைந்தது - பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் மோசடி - ஊழலால் இந்தியா தோல்வி அடைந்தது - பிரதமர் மோடி
10 ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்ததாக நான் சொன்னால் அது தவறு அல்ல என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி

பாரதீய  ஜனதா கட்சியின்  தேசிய மாநாடு  டெல்லி ராம்லீலா மைதானத்தில்  2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  

அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-

வரும் மக்களவைத் தேர்தல் 3-வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும்

1761ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால்தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர் வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது.  2014ம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும் என அமித்ஷா கூறினார்.

மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழலற்ற நிர்வாகத்தை  மத்திய பாஜக அரசு தந்துள்ளது. முழுமையான பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் குறித்து ஊழல்  குற்றஞ்சாட்டவில்லை என்று நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இது நடந்தது. உண்மையில் நாம் பெருமை கொள்ளலாம் நம் மீது எந்த களங்கமும் இல்லை என்று. எங்களுக்கு முன்னால் உள்ள அரசு  நாட்டை இருளுக்கு தள்ளியது.  முக்கியமாக 10  ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்ததாக நான் சொன்னால் அது தவறு அல்ல.

பாரதீய ஜனதாவின் பலம் தொண்டர்களிடம் தான் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் - வைகோ குற்றச்சாட்டு
காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் என்று வைகோ குற்றம் சாட்டினார்.