மாநில செய்திகள்

கொடநாடு வீடியோ : நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்-டிடிவி தினகரன் + "||" + Kodanad Video:In court observation Investigation should be made TTV Dhinakaran

கொடநாடு வீடியோ : நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்-டிடிவி தினகரன்

கொடநாடு வீடியோ : நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்-டிடிவி தினகரன்
கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
சென்னை

கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டு உள்ளார். அதில் கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம்  அளித்து உள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.