தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி தனியாக நின்று பிரதமர் மோடியை பதவியில் இருந்து இறக்க முடியாது - ஏ.கே.அந்தோணி + "||" + A K Antony: Congress alone can’t bring down PM Narendra Modi from power

காங்கிரஸ் கட்சி தனியாக நின்று பிரதமர் மோடியை பதவியில் இருந்து இறக்க முடியாது - ஏ.கே.அந்தோணி

காங்கிரஸ் கட்சி தனியாக நின்று பிரதமர் மோடியை பதவியில் இருந்து இறக்க முடியாது - ஏ.கே.அந்தோணி
காங்கிரஸ் கட்சி தனியாக நின்று பிரதமர் மோடியை பதவியில் இருந்து இறக்க முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ஏ.கே.அந்தோணி பேசியதாவது.

பாஜகவை வீழ்த்த போதுமான சக்தி இல்லை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது. இருப்பினும் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. மோடியை எதிர்க்கும் அளவுக்கு ராகுல்காந்தி மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார். ராகுல்காந்தியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். 

வரும் மக்களவைத்தேர்தல் குருஷேத்திர போர் போன்றது. நாட்டை பாதுகாக்க மதவாத சக்திகளை பதவியில் இருந்து அகற்ற வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.