தேசிய செய்திகள்

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 % இடஒதுக்கீடு; மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் + "||" + 10% reservation for economically backward; bill approved by President of India

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 % இடஒதுக்கீடு; மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 % இடஒதுக்கீடு; மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த 8ந்தேதி மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்நிலையில் பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 9ந்தேதி மாநிலங்களவையில் 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.  நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், மத்திய மந்திரிசபை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய- கர்நாடக எல்லையில் வசிக்கும் மராத்தா இளைஞர்களுக்கும் இடஒதுக்கீடு முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
மராட்டிய-கர்நாடக எல்லையில் உள்ள மராத்தா இளைஞர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
2. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு - மராட்டிய அரசு
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மராட்டிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
3. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 2019 கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்; மத்திய மந்திரி ஜாவடேகர்
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வருகிற 2019ம் கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
4. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழில் பொங்கல் வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
5. தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு
தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு அளித்தனர்.