தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக கடிதம் + "||" + Delhi Chief Minister's Office received an anonymous mail on January 9 that threatened to kidnap CM Arvind Kejriwal's daughter

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக கடிதம்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக கடிதம்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கடத்தப் போவதாக கடிதம் வந்துள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கடத்தப் போவதாக கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதம் ஜனவரி 9-ம் தேதி முதல்-மந்திரி அலுவலகத்திற்கு வந்துள்ளது.  கடிதம் தொடர்பாக முதல்-மந்திரி அலுவலக போலீசார் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்-மந்திரியின் மகளை கடத்தப் போவதாக கடிதம் வந்துள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.